ஆஸ்திரேலியாவில் அடையாளம் தெரியாத போலி சமூக வலைதளக் கணக்கில் ஒருவர் தொடர்ந்து, நாய்களுடன் உறவு கொள்ளும் வீடியோவையும், நாய்களை கொடூரமாக அடித்துக் கொலைசெய்யும் வீடியோவையும் 2020 – 2022-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து காவல்துறை அந்த வீடியோக்களை ஆய்வு செய்ததில், ‘சிட்டி ஆஃப் டார்வின்’ என எழுதப்பட்ட, நாய்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் கயிறு கண்டறியப்பட்டது. அதைத் தொடந்து நடந்த விசாரணையில், இங்கிலாந்தின் பிரபல முதலை நிபுணர் ஆடம் பிரிட்டன் (53) என்பவரை காவல்துறை கைதுசெய்து, நீதிமன்றக் காவலில் வைத்திருந்தது.
இது தொடர்பாக வெளியான தகவலில், பிரபல முதலை நிபுணர் ஆடம் பிரிட்டன், குழந்தைகளிடம் அத்துமீறுவதும், நாய்களை பராமரித்துக் கொள்வதாக வாங்கி, அவற்றுடன் உறவு கொள்வதும், ஒருகட்டத்தில் அவற்றை கொடூரமாக கொலைசெய்வதும், அதை வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், மாட்டிக்கொள்ளாமல் இந்த தவறுகளை எப்படி செய்வது எனக் கற்றுக்கொடுப்பதும் எனக் கோரமான செயல்களை, தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.
மேலும், 39 நாய்களைச் சித்ரவதை செய்து கொன்றது, நாய்களின் சடலங்களை முதலை போன்ற விலங்குகளுக்கு உணவாக்கியது உட்பட 56 குற்றங்களை ஒப்புக்கொண்டார். இது தொடர்பான வழக்கு டார்வின் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆடம் பிரிட்டனின் நடத்தை மிகவும் கோரமானது. அவருடைய குற்றங்கள் எந்த ஒரு சாதாரண மனித சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை” எனக் குறிப்பிட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறார்.