இலங்கை இராணுவ கஜபா படையணி மற்றும் கஜபா படையணி முன்னாள் போர்வீரர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Gajaba Unity Festival – 2024, மற்றும் வர்த்தக கண்காட்சி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 01, 2024 வரை நீர்கொழும்பு கடோல்கெலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக அறிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடு கஜபா முன்னாள் போர்வீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு), யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் கஜபா முன்னாள் போர்வீரர்களின் பங்குபற்றுதலுடன் பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.
இது களியாட்டம், கல்விக் கண்காட்சிகள், வியாபார கடைகள், கேளிக்கை விளையாட்டுகள், இராணுவக் கண்காட்சிகள் மற்றும் நாட்டின் பிரபல பாடகர்களின் உயர் தர இசை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. மேலும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கஜபா முன்னாள் போர்வீரர்களின் வாழ்வினை வலுவூட்டுவதற்கும், அவர்களது குடும்பங்களின் நலனுக்காகவும், ஊனமுற்றோர் மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.