இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம். தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதல்முறையாக மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசியை தனியாக அறிவித்துள்ளது. மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது, 2வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், 3வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. […]
