வென்னப்புவ கரையோரப் பகுதியில் இலங்கைக் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இந்திய மீன்பிடிக் கப்பல் மூலம் வென்னப்புவ தல்தெக (கடவத்தை) பகுதிக்கு சட்டவிரோதமாக வந்து இரகசியமாக தரையிறங்க முயற்சித்த இலங்கையர் ஒருவர் அண்மையில் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, கடற்படை புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பிரகாரம், வென்னப்புவ தல்தெக (கடவத்தை) பகுதியில் இந்திய மீன்பிடிக் கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் தரையிறங்க முற்பட்ட வேளையில் வென்னப்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இந்த நபர், போதைப்பொருள் கடத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கைது செய்யப்பட்ட நபர் மற்றும் இந்திய மீன்பிடி கப்பல் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.