சிறு போக விவசாயத்தின் பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி தற்போது சிறுபோகத்தின் போது விவசாயப் பாதிக்கப்புக்கள் பதிவு செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு அதற்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்தார்.
அதிகமான பிரதேசங்களில் இன்னும் விரைவில் அறுவடை இடம்பெறுவதாகவும், அறுவடை முடிந்ததும் உடனடியாக விவசாயப் பாதிப்பிற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சகல வயல்களும் 480,000 ஹெக்டயரில் 20இலட்சம் மெட்ரிக் தொன் நெல் அறுவடை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
அவை இதற்கு முன்னரான சிறு போகத்திற்கு ஒத்ததாக அறுவடை அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னரான சிறுபோகங்களில் 1.5மில்லியன் அளவிலேயே நெல் அறுவடை காணப்பட்டது.
அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் உற்பத்தியில் 77 வீதமானவை நாட்டு நெல் வகைகளும், 11வீதம் சம்பா செல் என்றும், 12 வீதம் கீறி சம்பா வும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.