எகிப்து வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்தலாதியின் அழைப்பின் பேரில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகஸ்ட் 07 தொடக்கம் 09 வரை எகிப்து நாட்டிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இச்சுற்றுப் பயணத்தின் போது அமைச்சர் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான எகிப்து கவுன்ஸிலின் தலைவரும் தூதுவரமான மொஹமட் அல்- ஒறாபி யை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாகக் காணப்படும் நல்லுறவை நினைவு கூர்ந்ததுடன், காஸாவின் நிலைமை உட்பட பிராந்தியத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே இலங்கை மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றம் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்தல் குறித்தும் எகிப்து வர்;த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் கெய்ரோ வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அமைச்சர் பங்கேற்றார்.
இதன்போது எகிப்து வர்த்தக சபைப் பொதுச் சம்மேளனத்தின் (FEDCOC), ஆசிய அலுவல்கள் குறித்த உதவி வெளிநாட்டமைச்சர், கெய்ரோ வர்த்தக சபையின் தலைவர் உட்பட மற்றும் எகிப்து வர்த்தக சம்மேளனம் என்பவற்றின் உயர் அதிகாரிகள் பலரும் அமைச்சருடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
விசேடமாக விவசாயம், ஆடை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத் தக்க மற்றும் வலுசக்தி சுற்றுலாக் கைத்தொழில் உட்பட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் முதலீடுகளை விருத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படாத திறனை வெளிக் கொண்டுவரும் முறை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கெய்ரோ வர்த்தக சபை 600,000 ஐ விட அதிகமான அங்கத்தவர்களைக் கொண்ட எகிப்தின் முதலாவது மற்றும் பாரிய வர்த்தக சபையாகும். அவ்வாறே அமைச்சர் எகிப்தின் பேராசிரியர் முப்தி ஷேக் இப்ராஹிம் அல்லாம் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.
இருநாடுகளுக்கு இடையே காணப்படும் நல்லுறவை வரவேற்றதுடன், சமய ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் மற்றும் சமாதானம் மற்றும் வாழ்க்கையை முன்னேற்றுதல், மக்களிடையே நெருங்கிய உறவை அதிகரித்தல் தொடர்பாகக் கருத்துக்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல ஒன்றும் இடம்பெற்றது.
பின்னர் அமைச்சர் எகிப்தின் 1848ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்ட முஹம்மது அலி பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையிலும் பங்கேற்றார்.
அவ்வாறே அமைச்சர் கெய்ரோவிலுள்ள எகிப்தின் வெளிநாட்டலுவல்கள், குடியகல்வு மற்றும் எகிப்தின் வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் அமைச்சின் பேராசிரியர் பத்ர் அப்தில்லாத்தியுடன் பரந்த மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தி வர்த்தக, முதலீடு, சுற்றுலா, கடற் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, கல்வி, கலாசாரம், தொல்பொருலியல் மற்றும் மனிதர்களிடையேயான உறவு போன்றவற்றை ஏற்படுத்தி, அதனைப் பரவலாக்குவதற்கு இயலுமான முயற்சிகள் குறித்தும் இச்சுற்றுப் பயணத்தின் போதும் ஆராயப்பட்டது.
இதனிடையே இலங்கை வெளிநாட்டலுவல் அமைச்சின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவனம் மற்றும் அமைச்சின் இராஜதந்திர ஆய்வு நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடும் நிகழ்வின் போது அமைச்சர் எகிப்தி வெளிநாட்டலுவல்கள் மற்றும் குடியகல்வு மற்றும் எகிப்து வெளிநாட்டவர்கள் தொடர்பான அமைச்சர் பேராசிரியர் பத்ர் அப்தெலட்டியுடனான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
அத்துடன் இருநாடுக்கு இடையே இராஜதந்திர பயிற்சி, திறன் விருத்தி, ஆய்வு மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பினை வலுப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.