அரச சேவையில் உள்ள அனைத்து பதவிகளும் 04 பிரதான நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்படும்

முழு அரச சேவையிலும் உள்ள அனைத்து பதவிகளையும் 04 பிரதான மட்டங்களின் கீழ் தரப்படுத்துவதற்கான பரிந்துரையாக 2025 வரவு செலவுத் திட்டத்தை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். அரச சேவையில் 30 இற்கும் மேற்பட்ட பல்வேறு தரநிலைகள் காணப்படுவதாகவும், இதனால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அனைத்து தரங்களையும் 04 தரங்களாக குறைக்கும் வகையில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் உள்ள அனைத்து பதவிகளும் 04 பிரதான நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஆட்சேர்ப்புத் தகைமைகள் அமைக்கப்படும் என்றும் அதற்கேற்ப வேலை விவரங்கள் மாறும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.