மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ (Birmingham Small Arms Company -BSA ) நிறுவனம் கோல்டு ஸ்டார் 650 மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது.
652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500ஆர்பிஎம்மில் 45எச்பி , 4000ஆர்பிஎம்மில் 55என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
213 கிலோ எடையுள்ள கோல்டு ஸ்டாரில்5 விதமான நிறங்களை பெற்று legacy எடிசனில் சில்வர் ஷின் நிறத்தைப் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
17 அங்குல வீலுடன் பைரேலி பான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் (Pirelli Phantom Sportscomp) டயரை பெற்று முன்புறத்தில் 100/90 மற்றும் 150/70 பின்புற டயரை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் பிஎஸ்ஏ நிறுவனம் கோல்டு ஸ்டார் ரூ.3.50 லட்சத்துக்குள் துவங்கலாம்.