ஒகேனக்கல் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நீர் வரத்து 43000 கன அடியாக அதிகரித்துள்ளது. மீண்டும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 11ம் தேதி மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கனஅடியாகவும், நேற்று காலை 30,000 கன அடியாகவும் அதிகரித்தது. […]