பேட்டுக்கு ஓய்வு கொடுத்து இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்

மெல்போர்ன்,

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இறுதி ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டது.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் சதமடித்து (137 ரன்) சதமடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்னஸ் லபுஸ்ஷேன் 58* (110) ரன்கள் அடித்தார்.

அதனால் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது உலகக் கோப்பையை வென்றது. இந்த சூழ்நிலையில் 2023 உலகக்கோப்பை இறுதிஆட்டத்தில் இந்தியாவை தோற்கடிக்க உதவிய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இது உலகக் கோப்பை இறுதிப்போட்டி பேட்டுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் என நினைக்கிறேன்’ என கண்கலங்கிய எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக அந்த பேட்டை பயன்படுத்தி தொடர்ந்து விளையாடியதால் தற்போது சேதமடைந்துள்ள புகைப்படத்தை அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே அந்த பேட்டை மேற்கொண்டு பயன்படுத்தாமல் அதை நினைவுப் பரிசாக வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் லபுஸ்ஷேன் இவ்வாறு வெளியிட்ட பதிவு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக அமைந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.