ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 650 பைக்கை நடப்பு ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக தற்பொழுது உள்ள கிளாசிக் 350 மாடலை அடிப்படையாக கொண்டு கூடுதலான சில நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் கொண்டு பிரீமியம் ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வெளிப்படுத்தலாம்.
சமீபத்தில் வந்துள்ள கிளாசிக் 350 மாடல் அல்லது ஏழு நிறங்களை பெற்று இருந்தாலும் கூடுதலாக பல்வேறு நிறங்களை விருப்பம் போல் தேர்ந்தெடுத்து கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வகையிலான ஆப்ஷனை ராயல் என்ஃபீல்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது இதன் மூலம் பல்வேறு விருப்பமான நேரங்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் அதுபோன்ற ஆப்ஷனையும் கிளாசிக் 650 பைக்கில் இந்நிறுவனம் வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகின்ற 650சிசி இன்ஜின் கொண்ட மாடல்களில் உள்ள அதே இன்ஜினை தான் புதிய கிளாசிக் 650 மாடலிலும் பகிர்ந்து கொள்ள உள்ளது.
648cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7100 RPM-ல் பவரை 47 Hp வழங்குவதுடன், 4000 RPM-ல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 650சிசி கிளாசிக் மாடல் ஆனது தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த மாடல் நடப்பு ஆண்டின் அதாவது 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் டெலிவரி வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இது தவிர இந்நிறுவனம் 650 சிசி சந்தையில் இன்டர்செப்டார் பியர் 650, ஹிமாலயன் 650 போன்ற மாடல்களை தயாரித்து வருகின்றது.