கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியின் செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜகோபால். இவர், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ. 20,000 -த்தை லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று குமரேஷ் மறுத்ததும், ‘கேட்டப் பணத்தை கொடுக்கலைன்னா, துரும்பும் அசையாது’ என்று எச்சரித்துள்ளார்.
இதனால், இறுதியாக ரூ.17,500 பணம் தந்தால் சொத்து வரி வழங்குவதாக செயல் அலுவலர் ராஜகோபால், குமரேஷிடம் தெரிவித்துள்ளார். இருந்தாலும், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீஸார் ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளை குமரேஷிடம் கொடுத்து, அதை செயல் அலுவலரிடம் கொடுக்க சொல்லியுள்ளனர்.
அப்படி, குமரேஷ், செயல் அலுவலர் ராஜகோபாலிடம் பணத்தினை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவருக்கு உறுதுணையாக இருந்த அலுவலக உதவியாளர் சிவக்குமாரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயல் அலுவலர் ராஜகோபால் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல உள்ள நிலையில், சொத்து வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்ட விவகாரத்தில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88