குற்றச்செயலில் ஈடுப்பட்ட சிறுவன்; எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீதிமன்றம் கொடுத்த வித்தியாச தண்டனை

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் காவல்நிலைய எல்லையில் திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், இளைஞர் நீதிக்குழுமம், முதன்மை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டார். அப்போது, அந்த இளஞ்சிறாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மேற்படி இளஞ்சிறாருக்கு 15 நாட்கள் தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமென்று முதன்மை நடுவர் உத்தரவிட்டார்.

அதன்படி, மேற்படி இளஞ்சிறாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தினர். அப்போது, காமினி அந்த சிறுவனுக்கு தக்க அறிவுரையை வழங்கியும், ‘இனிமேல் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது’ என எச்சரித்தும், இன்று முதல் 15 நாட்களுக்கு, தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் போக்குவரத்தினை சீர்செய்திட உதவிபுரியுமாறு அறிவுரை வழங்கி அனுப்பினார்.

சிறுவன்

அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னல் பகுதியில் ஸ்ரீரங்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சிறுவன் ஈடுபட்டார். தொடர்ந்து, அவர் இன்று முதல் 15 நாட்களுக்கு மாம்பழச் சாலை மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயலில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கு போன்ற தண்டனை அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.