கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் Meta AI… இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் முறை

Meta AI Feature in Instagram: தற்போது AI எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்புகளைக் குறிக்கிறது. இன்றைய உலகில், தகவல்களை பெற நாம் அதிகம் நாடுவது இணையத்தை தான். அந்த வகையில், நம் கேள்விகள் அனைத்திற்குமான பதில்களை கொடுக்கும் ஆற்றலை கொண்ட செயற்கை நுண்ணறிவு, இப்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

செயற்கை நுண்ணறிவு கருவிகள்

மெட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை வழங்கியுள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Copilot, OpenAI வழங்கும் ChatGPT  மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஆகிய செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு போட்டியாக Meta AI அமைந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில்  Meta AI அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மெட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Meta AI 

Meta AI என்பது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட புதிய அம்சம். பயனருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் சேட்டிங் கருவி.  இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவால் உருவாக்கப்பட்ட Meta AI என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் பயனுள்ளது. அதில் நீங்கள் என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கான பதில் அதனிடம் உண்டு. போரடித்தால் அதனுடன் உரையாடலாம். அது மட்டுமல்லாமல், உங்கள் செயல் திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க அதன் உதவியை நாடலாம். இன்ஸ்டாகிராமில் Meta AI  அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராமில் மெட்டா AI அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது

1. முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியைத் திறக்கவும்.

2.  பின்னர் திரையில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து சாட்டிங் திரைக்குச் செல்லவும்.

3. இன்ஸ்டாகிராமில்,  திரையின் மேற்புறத்தில் நீங்கள் சேர்ச் பார் என்னும் தேடல் ஆப்ஷனை பெறுவீர்கள்.

4. சேர்ச் பார் என்னும் தேடல் பட்டியில் நீல வட்டம் கொண்ட ஐகானைக் காண்பீர்கள். இது Meta AI இன் ஐகான். அதை கிளிக் செய்யவும்.

5. நீல வட்டம் கொண்ட ஐகானை  கிளிக் செய்தவுடன், உங்கள் மொபைலில் ஒரு புதிய திரை திறக்கும், அங்கு நீங்கள் Meta AI உடன் தொடர்பு கொள்ளலாம்.

6. இப்போது நீங்கள் Meta AIயிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். தகவல் களஞ்சியமாக இருக்கும் Meta AI உங்களுக்கு தகவல்களை அள்ளிக் கொடுப்பதோடு, உங்களுக்கு பொழுதுபோக கதை கூட சொல்லும்.  நகைச்சுவைகளை கூறி உங்களை மகிழ வைக்கும். உங்கள் பணியில் உங்களுக்கு உதவுமாறு கூட அதனிடம் கேட்கலாம்.

மெட்டா AI அம்சத்தினால் பெறும் நன்மைகள்

1. ஆக்கப்பூர்வமாக திறனை வளர்த்துக் கொள்ளுதல்:

மெட்டா AI கவிதை எழுத, கதைகளை உருவாக்க அல்லது குறியீட்டை எழுத உங்களுக்கு உதவும்.

2. கேள்விகளுக்கான பதில்கள்:

இன்றைய முக்கிய செய்திகள் முதல், வானிலை அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய தகவல் போன்ற எந்தக் கேள்வியையும் நீங்கள் Meta AIயிடம் கேட்கலாம். அதற்கு சளைக்காமல் பதில் கொடுக்கும்.

3. நண்பர்களுடன் அரட்டையடிப்பதை போலவே Meta AI உடல் அரட்டை அடிக்கலாம் 

நண்பருடன் நீங்கள் பேசுவதைப் போலவே, உங்கள் மனதில் நினைத்தவற்றை கூறி, அதனிடம் ஆலோசனைகளை கேட்கலாம். மெட்டா AI உடன் நீங்கள் மிக சாதாரணமாக உரையாடலாம்.

4. கதைகள் சொல்லி மகிழ வைக்கும்  Meta AI 

உங்களுக்கு போர் அடித்தால், அதனிடம் உங்கள் பிடித்த வகையில் கதை கூறுமாறு கேட்கலாம்.  Meta AI உங்களுக்கு பல்வேறு வகையான கதைகளைச் சொல்லும்.

5. ஜோக்குகள் சொல்லி மகிழ வைக்கும்  Meta AI 

உங்களுக்கு வேடிக்கையான நகைச்சுவைகளை கூறி, Meta AI உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.