விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை (ஆகஸ்ட் 15) பாதுகாப்புக் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நேற்று (13) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 09 மணி முதல் 11 மணி வரை கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர்..
இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வது, அமைதியை பேணுதல், விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என சில விசேட கடமைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு வேட்பாளருடன் வரும் கட்சி உறுப்பினர்களுக்கும் தனித்தனி இடங்கள்; ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வேட்பாளரின் கட்சி உறுப்பினர்கள்ஃஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்; குறித்து அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் செயலகத்திற்கு பாதுகாப்பை வழங்குவதோடு, அதே பகுதியை உள்ளடக்கும் வகையில் வீதி மறியல் மற்றும் பொலிஸார் நடமாடும் வகையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், விசேட போக்குவரத்தை கையாள்வதற்காக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இந்த பாதுகாப்பு கடமைகள் நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.