அரசாங்கம் எப்போதும் பொதுமக்களுக்கு வழங்க முடியுமான உயரிய சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முன்மொழிவில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்..
நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர், உதய ஆர். செனவிரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட் நிபுணர் குழுவின் ஊடாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைய முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்குகு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
வாழ்க்கை நிலைமைகள், பொருளாதார நிலைமைகள், பணம் செலுத்தும் திறன் போன்ற அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி இந்த குழு அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர், நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட தீர்வு முன்மொழிவுகள் அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.