இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி…

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று (15) காலை ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு யெ;வதற்கான ஜனாதிபதி தேர்தலில் இம்முறை 17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். விசேடமாக இம்முறை புதிதாக ஒரு மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 9 மில்லியன் பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுனர்.

கடந்த 2029 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 45 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தும் 35 பேர் மாத்திரமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஐ_லை மாதம் 26 திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் கடுப்பணம் செலுத்துவதற்கான காலம் வழங்கப்பட்டு, நேற்று நன்பகலுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் முடிவடைந்தது.

செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு சமரப்பிப்பதற்கான காலம் இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை வழங்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பார்க்க கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இம்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 45 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தும் இவர்களில் 31 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இம்முறை 45 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தும் 39 பேர் மாத்தரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 17 சுயேட்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத மற்றும் வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக ஒருவரும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 22 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 4ஆம் 5ஆம் 6ஆம் ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.