இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்பிரிக்கா கண்டத்தின் பல நாடுகளிலும் குழந்தை திருமணம் பெரும் சிக்கலாக தொடர்கிறது. அது குறித்துதான் உலக நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பட்டியலில் ‘வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவிலும், குழந்தைத் திருமணம் நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
குழந்தை திருமணம் உலகின் பின்தங்கிய பகுதிகளில் மட்டுமே இருக்கும் பிரச்னை என்று பரவலாக நம்பப்பட்டாலும், அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் Unchained At Last எனும் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில், “18 வயது பூர்த்தியடையும் முன்பு நடத்தப்படும் குழந்தை திருமணம், கட்டாய திருமணம் போன்றவை 2017-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 50 மாகணங்களில் சட்டப்பூர்வமாக இருந்தது.
இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக 2018-ம் ஆண்டு அமெரிக்கன் சமோவாவும், 2020-ல் அமெரிக்க விர்ஜின் தீவு, பென்சில்வேனியா, மினசோட்டா, 2021-ல் ரோட் தீவு, நியூயார்க், 2022-ல் மசாசூசெட்ஸ், வெர்மான்ட், கனெக்டிகட், மெச்சிகன் 2023-ல் வாஷிங்டன், 2024-ல் நியூ ஹாம்ப்ஷயர் ஆகிய பகுதிகளில் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும், குழந்தை திருமணம் 37 மாகாணங்களில் சட்டப்பூர்வமாக உள்ளது.
2000-ம் ஆண்டு முதல் தற்போது வரை , அமெரிக்காவில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், உட்பட 300,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இன்னும் பல அமெரிக்க மாகாணங்ககளில் சட்டப்பூர்வமாக இருக்கும் குழந்தைத் திருமண அனுமதி சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சிறுமிகள், அதிக பாலியல் வன்முறை சுரண்டல்களையும், சட்டரீதியான பொருளாதார சுரண்டலை எதிர்கொள்கின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில், 2000-2018 வரை அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணங்கள் (41,774) நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கலிபோர்னியா, புளோரிடா, நெவாடா மற்றும் வட கரோலினா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் குழந்தை திருமணம் குறித்த இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88