ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ரோட்ஸ்டெர் பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 74,999 முதல் துவங்கி ரூ.2.49 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோட்ஸ்டெர் X, ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்ஸ்டெர் புரோ என மூன்று விதமான வேரியண்டுகளில் ஏழு விதமான மாறுபட்ட வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
Ola Roadster X
துவக்கநிலை சந்தைக்கு வந்துள்ள ரோட்ஸ்டெர் X மாடலில் 2.5 kWh, 3.5kwh, மற்றும் 4.5 kWh என்ன மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடல்களில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் இடம் பெற்று இருக்கின்றது.
வழக்கமான எல்இடி ஹெட்லைட் பெற்று இந்த மூன்று மாடல்களிலும் ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என மூன்று ரைடிங் மோடுகளுடன் வந்துள்ளது. இந்த மூன்று மாடல்களின் டெலிவரி 2025 ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது.
- ரூ.74,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் X 2.5 kWh வேரியண்டில் பவர் 11kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 105km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 117 கிமீ ரேஞ்ச் வழங்கும். இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 3.3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.84,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் X 3.5 kWh வேரியண்டில் பவர் 11kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 117km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 159 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவித்துள்ளது. சார்ஜிங் நேரம் 0-80% பெறுவதற்கு 4.6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
- ரூ.99,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் X 4.5 kWh டாப் வேரியண்டின் பவர் மற்ற இரண்டை போலவே 11kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 124km/hr கொண்டு முழுமையான 100% பேட்டரி சார்ஜில் 200 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 5.9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
Ola Roadster
அடுத்து ரூ.1,04,999 விலையில் துவங்குகின்ற ஓலா ரோட்ஸ்டெரில் 3.5 kWh, 4.5 kWh மற்றும் 6 kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் ஹீல் ஹோல்டு மற்றும் டிசென்ட் வசதி, டயர் பிரெஷர் மானிட்டர், டெம்பர் அலெர்ட், 6.8 அங்குல தொடுதிரை TFT கிளஸ்டரில் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் மற்றும் ஓலா மேப் நேவிகேஷன் உள்ளன.
மூன்று விதமான நிறங்களை பெற உள்ள இந்த மாடலில் எல்இடி ப்ராஜெக்டர் ஹெட் லைட் , இரு பக்க டயர்களிலும் டிஸ்கிரைப் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் கார்னரிங் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்படுகின்றது.
ரோட்ஸ்டெர் மாடலில் ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களின் டெலிவரி 2025 ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது.
- ரூ.1,04,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் 3.5 kWh வேரியண்டில் அதிகபட்ச பவர் 13kw வெளிப்படுத்தும் நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 116km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்ச் வழங்கும். இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 4.6மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.1,19,999 விலையில் உள்ள ஓலா ரோட்ஸ்டெர் 4.5 kWh வேரியண்டின் பவர் 13kw வெளிப்படுத்தும் நிலையில் வேகம் அதிகபட்சமாக 126km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 190 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவித்துள்ளது. சார்ஜிங் நேரம் 0-80% பெறுவதற்கு 5.9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
- ரூ.1,39,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் 6 kWh டாப் வேரியண்டின் பவர் மற்ற இரண்டை போலவே 13kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 126km/hr கொண்டு முழுமையான 100% பேட்டரி சார்ஜில் 248 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 7.9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
Ola Roadster Pro
ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் புரோ எலெக்ட்ரிக் பைக்கில் 8kwh மற்றும் 16kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. கார்னரிங் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.
10 அங்குல TFT டிஸ்பிளே பெற உள்ள மாடலின் 16kwh பேட்டரி கொண்ட வேரியண்டில் லிக்யூடு கூல்டு மோட்டாருடன் பவர் 52kw மற்றும் டார்க் 105 Nm ஆக உள்ள நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 194km/hr பெற்று முழுமையாக சிங்கிள் சார்ஜில் 579 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அறிமுகம் அடுத்த ஆண்டின் தீபாவளி 2025 சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரோட்ஸ்டெர் புரோ மாடலில் ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அப்சைடு டவுன் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
- Ola Roadster Pro 8 kWh – ₹ 1,99,999
- Ola Roadster Pro 16 kWh – ₹ 2,49,999
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை விபரம்