பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருந்த அதன் நிறுவனர் பாபா ராம்தேவ், தற்போது அலோபதி மருந்துகளால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
முன்னதாக, அலோபதி மருந்துகளுக்கு எதிரான பதஞ்சலியின் தவறான விளம்பரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியும், செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வாயிலாகவும் பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். அதன்பிறகு, இனிமேல் இத்தகைய தவறைச் செய்யமாட்டோம் என அவர் கூறியதையடுத்து, கடந்த வாரம் இந்த வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்.
இவ்வாறிருக்க, சுதந்திர தினமான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், “அலோபதியின் நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருப்பினும், ஆயுர்வேத மருத்துவத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாமல் இருக்கிறது. நாம் படித்த வரலாற்றின்படி, உலகம் முழுவதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக பத்து கோடி மக்களை ஆங்கிலேயர்கள் கொன்றனர்.
மேலும், இஸ்லாத்தின் பெயரால் மில்லியன் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மார்க்ஸ், லெனின், மாவோ புரட்சியிலும் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. தற்போது, நச்சு செயற்கை மருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருகின்றன. எனவே, உள்நாட்டு மருத்துவத்துக்கான போராட்டத்தில் எங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88