காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு இன்று (16.08.2024) காலை 10.00 மணிக்கு நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல் பி.ப 02.00 மணிக்கு காங்கேசன்துறையினை வந்தடையவுள்ளது.
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (15.08.2024) பி. ப 03.00 மணிக்கு காங்கேசன்துறை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு ககலந்துரையாடப்பட்டது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பாக மேற்படி கலந்துரையாடலில் ஆராயப்பட்டமை குறகப்பிடத்தக்கது.