கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் டாக்டர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது கொல்கத்தாவில் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதில் 15 போலீஸார் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தவர்களின் படங்களை அடையாளம் கண்டு அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் அடுத்த சில மணி நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை சி.பி.ஐ.கையில் எடுத்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ சம்பவம் நடந்த தினத்தன்று பணியில் இருந்த 8 டாக்டர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அதோடு கொலை செய்யப்பட்ட டாக்டருடன் அன்று இரவு பணியாற்றிய 3 பேரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ அதிகாரிகள் மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு நடத்தினர். மருத்துவமனை சூறையாடப்பட்ட போது, கொலை நடந்த செமினார் ஹாலுக்குள் போராட்டக்காரர்கள் சென்றிருந்தனரா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஆளுநர் ஆனந்த் போஸும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து டாக்டர்ளும், செவிலியர்களும் கொல்கத்தா மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மருத்துவ கவுன்சில் நாளை 24 மணி நேர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88