ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ஊடக நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கத்தின் சகல அதிகாரிகளுக்கும் தான் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று (15) ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒழுங்கு விதிகளை மீறுவதற்கு எந்த ஒரு அதிகாரியும் ஆசைப்படாதவாறு சகல வேட்பாளர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் , தவறான ஊழல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள், விதிகளை மீறுதல் போன்றவை தொடர்பான தண்டனைகள், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சட்டம் மற்றும் அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அத்தண்டனைகள் குடியுரிமைகளை இழக்கும் அளவுக்கு அவை கடுமையானது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக் காட்டினார்.