ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் 3.71 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல் […]