தேர்தல் காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து (ஆகஸ்ட் 15) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த ஒரு வார காலம் ஜனநாயக நாடுகளில் தேர்தலில் போட்டியிடுபவர்களும் நாட்டின் நிருவாகமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பில் தேர்தல் தொடர்பில் தனிச் சட்டம் என்பன காணப்படுகின்றன.
எனவே அவற்றை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல்.ரத்னாயக்க (15) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;
அதன்படி இந்த தேர்தல் தர்மத்தின் அடிப்படையில் செயல்படுவது சகல வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களதும் கட்டாயக் கடமை என அவர் வலியுறுத்தினார்.
இந்த நெறிமுறைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் 2024.07.26 ஆம் திகதி அன்று 2394/58ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் வாக்குகளை வழங்கும் போதும் வாக்கு வழங்கிய சீட்டு என்பவற்றை புகைப்படம் எடுத்தல் மற்றும் வாக்கு வழங்கிய முறையை வெளியிட முடியாது என வலியுறுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், வாக்குச் சீட்டை காட்சிப்படுத்துவதும் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடுதல் சட்ட விதிகளை பின்பற்றுமாறும், ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான சட்டத்தின் 74 ஆவது சரத்தின் படி ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து (ஆகஸ்ட் 15 ஆம் திகதி) தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு பெறும் வரை வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை அதிகரிப்பதற்காக அல்லது வேறு ஒரு வேட்பாளரைத் தாழ்த்துவதற்காக பிரகரங்களை விநியோகித்தல், காட்சிப்படுத்தல் மற்றும் சட்ட விதிகளுக்கு முரணாகவும் செயற்படுதல் போன்றவற்றை சகல வேட்பாளர்களினதும் அவர்களின் ஆதரவர்களதும் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஆலோசனைகள் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார விளம்பரம் அல்லது வேறு விதமான புகைப்பட விளம்பரம் அல்லது அவ்வாறான ஓவியம் அல்லது இலட்சினை மற்றும் கொடி போன்றவற்றை தேர்தல் கூட்டம் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தினத்தில் அந்த இடத்தில் அல்லது அதை அண்டிய சுற்றி அல்லது முறையாக அனுமதி பெறப்பட்ட அலுவலகங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ரத்னாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சகல வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களதும் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் யாரேனும் இவ்வாறான வழிகாட்டல் மற்றும் சட்ட விதிகரளுக்கு முரணாக செயற்பட யாருக்கும் அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த தலைவர் ரத்னாயக்க, தயவு செய்து நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்றும் அவற்றை மீறினால், வழங்கப்படும் தண்டனை குறித்து ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான சட்டம் மற்றும் அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அத்தண்டனைகள் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான உரிமை இழக்கப்படும் அளவு கடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.