தொற்று நோய் இலங்கையில் முதன்மை பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இலங்கையில் இடம்பெறும் உயிர் இழப்புக்கள் 80% ஆனவை தொற்றா நோய்களினால் ஏற்படுவதாகவும் மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டார தெரிவித்தார்.
இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக பல தரப்பினரும் தலையிட்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கலந்துகொண்ட போதே பனிப்பாளர் இந்த தகவலை வெளியிட்டார்.
மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் யோசனைகளை பின்பற்றி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தற்போதைய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாளககோட்டேகொட வினால் இதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இக்குழு மாத்தளை மாவட்ட செயலாளரின தலைமையில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்கள்,வளைய கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர், பொலிஸ், மாவட்ட சமூக சேவைகள் மற்றும் விளையாட்டு ஆகிய அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளை உள்ளடக்கியதாக இக் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழு இணைந்து தொற்றா நோய்களை தடுப்பதற்கான அவசியமான வேலைதிட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது