சென்னை: பாடலாசிரியர் விவேக் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. கடைசியாக அட்லீ மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தற்போது பாடலாசிரியர் விவேக் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் பாடல்களை எழுதி பாடலாசிரியராக மாறியவர் விவேக்.
