துபாய்,
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் முதல் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி கயானாவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 40 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும் உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் விவரம்;
1.) இந்தியா – 68.52 சதவீதம்
2.) ஆஸ்திரேலியா – 62.50 சதவீதம்
3.) நியூசிலாந்து – 50.00 சதவீதம்
4.) இலங்கை – 50.00 சதவீதம்
5.) தென் ஆப்பிரிக்கா – 38.89 சதவீதம்
6.) பாகிஸ்தான் – 36.66 சதவீதம்
7.) இங்கிலாந்து – 36.54 சதவீதம்
8.) வங்காளதேசம் – 25.00 சதவீதம்
9.) வெஸ்ட் இண்டீஸ் – 18.52 சதவீதம்