புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறிய ஆறு மற்றும் மகுர கங்கை வழிந்து ஓடும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடியதாக அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுகங்கையின் சிறிய ஓடை வழிந்தோடும் மேட்டுப்பகுதிகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய மழை வீழ்ச்சி காணப்படுவதாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் இந்த அனர்த்தம் ஏற்படலாம் என்ற முன்னறிவித்தலை நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதனால் குடா கங்கை மற்றும் மகுரா கங்கை ஆகியவற்றை சுற்றியுள்ள தாழ் நிலப் பகுதிகள் ஊடாக செல்லும் பாதையில் உள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அப்பிரதேச மக்களையும் அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.