தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு அனுமதி வழங்குவது பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முதல் தலைவராக முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் 2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு […]