நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செப்டம்பர் முதல் தொடர்ந்து பல்வேறு ஸ்கூட்டர் மாடல்களை குறிப்பாக டெஸ்டினி 125, ஜூம் 125R, ஜூம் 160, இது தவிர ஹீரோவின் எலக்ட்ரிக் பிராண்டான வீடா மூலம் குறைந்த விலை இ-ஸ்கூட்டர் மற்றும் நடுத்தர சந்தைக்கு ஏற்ற இ-ஸ்கூட்டர் என மொத்தமாக ஐந்து ஸ்கூட்டர்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட இருக்கின்றது.
ஹீரோ டெஸ்டினி 125
தற்பொழுது உள்ள டெஸ்டினி மாடலை விட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் நவீனமான அதே நேரத்தில் ரெட்ரோ ஸ்டைலை வெளிப்படுத்தும் வகையிலாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. புதிய டெஸ்டினி 125 ஏற்கனவே இந்த மாடலுக்கான காப்புரிமை பெறப்பட்ட படங்கள் வெளியான நிலையில் சில படங்களும் ஏற்கனவே கசிந்துள்ளது முதல் முறையாக நாம் தான் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என குறிப்பிட்டு இருந்தோம் அதன் அடிப்படையில் தொடர்ந்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த 125சிசி மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 9 BHP பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.6 cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே முன்னணி ஊடகங்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளது.
ஹீரோ ஜூம் 125R
EICMA 2023 கண்காட்சியில் முதல் முறையாக காட்சிக்கு வந்த ஜூம் 125ஆர் மாடல் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்போட்டிவ் ஸ்டைல் ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்றது. அனேகமாக இந்த மாடலும் பண்டிகை காலத்திற்கு முன்பாக விற்பனை வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் செப்டம்பர் மாதத்திலேயே விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
14-இன்ச் அலாய் வீல் பெற்ற ஜூம் 125ஆர் ஸ்கூட்டரில் உள்ள 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வழங்குகின்றது.
ஹீரோ ஜூம் 160
யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ள மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரான ஜூம் 160 தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்பாக இந்த ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கும் அல்லது நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டு டெலிவரி தொடங்கப்படலாம். ரிமோட் கீ உடன் லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14hp மற்றும் 13.7Nm டார்க் வழங்குகின்றது.
இரண்டு வீடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹீரோவின் வீடா இ-ஸ்கூட்டர் பிரிவில் புதிதாக இரண்டு மாடல்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இதில் குறைந்த விலை மாடல் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இரண்டு மாடல்களும் மிக குறைந்த விலை அதாவது ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக மாஸ் மார்க்கெட் மற்றும் மெயின்ஸ்டீரிம் மார்க்கெட் ரூ.1.20 லட்சம் என இரண்டிலும் வரவுள்ளது.