நாட்டின் ஒரே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மலிவான விலையில் அருமையான மலிவு ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் திட்டங்களை நோக்கி மக்களின் கவனம் திரும்பியது.
BSNL ரீசார்ஜ் திட்டம்
நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு காலத்தில் பிஎஸ்என்எல் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், காலப்போக்கில் தனியார் நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறின. சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை விலையுயர்ந்ததாக மாறினாலும் பிஎஸ்என்எல் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை மாற்றவில்லை.
BSNLஇன் பிரபலமான திட்டம்
BSNL அதன் பயனர்களுக்கு ரூ.485 கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 82 நாட்கள் செல்லுபடியாகும். பல நன்மைகளுடன் வரும் இந்தத் திட்டத்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது BSNL அதிகபட்ச செல்லுபடியாகும் திட்டத்திலேயே பிற வசதிகளையும் வழங்குகிறது.
82 நாள் செல்லுபடியாகும் திட்டத்தின் முக்கிய நன்மைகள்
செல்லுபடித்தன்மை : 485 ரூபாயில் செல்லுபடியாகும் காலம் 82 நாட்கள் கொண்ட இந்தத் திட்டத்தை வாங்கினால், நீண்ட காலத்திற்கு எந்த கவலையும் இல்லாமல் சேவைகளைப் பெறலாம்.
கட்டுபாடற்ற பேச்சுரிமை : இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுகிறார். அதாவது எந்த நெட்வொர்க்கிலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், அதாவது எந்தவித கட்டுப்பாடும் அற்ற பேச்சுரிமைக் கிடைக்கும்.
தினசரி தரவு : இந்த திட்டத்தில், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது பொதுவகா தினசரி இணைய பயன்பாட்டிற்கு போதுமானது.
எஸ்எம்எஸ் : இந்த திட்டத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி உள்ளது.
நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் இணையச் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு நல்லது. குறைந்த செலவில் அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டாவை விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாகும். BSNL இன் இந்த திட்டம் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் விலை குறைவாக இருக்கிறது.
இதைத் தவிர, 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்தி வரும் அரசு தொலைதொடர்பு நிறுவனம்,. நாடு முழுவதும் மிக விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. உடனடியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாக 4ஜி நெட்வொர்க் டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல், தனது பணியை துரிதப்படுத்தி உள்ளது. மேலும், அரசு தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு இந்திய பட்ஜெட்டில் அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.