அரசாங்க ஊழியர்களின் அதிக சம்பள உயர்விற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலளிப்பு…

“சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25000 ரூபா கொடுப்பனவே 3 வருடங்கள் முழுவதும் வழங்கப்படும். கனிஷ்ட தரத்திலான சேவையாளர்களுக்கும் ஆகக் குறைந்த சம்பளமாக 55000 ரூபா அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முடியும்.”

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன அரசாங்க சேவையின் அதிக சம்பள உயர்விற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர்;

“அமைச்சரவை அனுமதி கிடைத்த அரசாங்க சேவை சம்பள உயர்வுக்கான யோசனை சர்வதேச நாணய நிதியத்தின்  ஒதுக்கீட்டிற்கு இணங்க மூன்று வருடங்கள் மாற்றம் அடையாமல் காணப்படுகின்றது.  எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைக்கு அமைய செயற்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்திற்காக இந்த சம்பள அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

ஆனால் ஊடகம் ஒன்று இதனை சரியாக பிரசுரிக்கவில்லை. அமைச்சரவையில் வாழ்க்கைச் செலவு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தவறான முறை என சமூக மயப்படுத்தப்படுமாயின் அதனை சரிப்படுத்துவதற்கு அமைச்சரவைப் பேச்சாளராக எனக்குக் கடமையும் பொறுப்பும் உள்ளது.

 அமைச்சரவை பத்திரத்தை வெளியில் கொண்டு செல்ல முடியாது அது இரகசியமானது. அவற்றை வெளியில் கொண்டு செல்வதில்லை. அமைச்சின் செயலாளர்களுக்கு அவற்றின் பிரதிகள் அனுப்பப்படும்.

அமைச்சரவைப் பேச்சாளர் என்ற ரீதியில் தான் செயற்படுகின்றேன். அச்செயற்பாடுகளின் போது ஊடகவியலாளர்களுடன் பொறுப்புடன் செயற்பட்டேன். தன்னால் மேற்கொள்ளப்படும் வெளியீடுகள் அரசியலமைப்புக்கு இணங்க சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்படுவதுடன், அவை ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அவை பேராசிரியர் பந்துல குணவர்தன வெளியிட்டவை அன்றி தான் வழங்கும் தகவல்கள் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே ஆகும்.   

நீண்ட காலமாக அடிப்படைச் சம்பளம் சரி செய்யப்படாமையினால் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் 25000 ரூபா வீதம் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவை மூன்று வருடங்கள் பிரிக்காது வழங்கக் கூடியதாக இருந்தது என அவர் வலியுறுத்தினார்.

இந்தத் தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் சில ஊடக நிறுவனங்கள் அதன் ஒரு பகுதியை மாத்திரம் சமூக மயப்படுத்தி இருந்தது.

இதன் போது அதிகமானவர்கள்  அடிப்படைச் சம்பளம் தொடர்பாக அன்றி 25,000ரூபா குறித்து மாத்திரமே தகவல் வெளியிட்டார்கள் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தை கொண்டு நடாத்துதல் மற்றும் அரசியல் செய்தல் என்பது இரண்டு விடயங்கள். தற்போது நிதி அமைச்சர் வரவு செலவுத் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. 

அதற்கு உள்ளடக்குவதற்காக அமைச்சரவை அறிவித்தலை சரி செய்ய வேண்டும். சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25,000 ரூபா கொடுப்பனவை திருத்தப்படாத மூன்று வருடங்களுக்கும் வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளது என அவர் விவரித்தார்.

அத்துடன் அடிப்படைச் சம்பள திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் நூற்றுக்கு 255.35 அளவில் அதிகரிக்கும். கனிஷ்ட ஊழியர்களுக்கு ஆக குறைந்தது மாதத்திற்கு 55000 ரூபாய் அல்லது அதைவிட அதிகமான தொகை கிடைக்கும்.

2027 வரை வரவு செலவுத் திட்டத்திற்காக பற்றாக்குறையாகவும் நிதி ஒதுக்கீட்டின் அளவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதற்கான ஆவணங்களில் கையொப்பமும் இடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நானே நிதியத்தினால் திருத்தப்பட்ட அல்லது நானே நிதியத்தின் செயல்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் இடம்பெறும்.

சம்பள அதிகரிப்பு யோசனை சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வழங்கப்படுவதாகவும், இந்த சம்பள கொடுப்பனவிற்கு போதிய நிதி காணப்படுகின்றது மையினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி முகாமைத்துவ பொறுப்புக்கள் தொடர்பான சட்டமும் காணப்படுகிறது.”  என்றும் அமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.