கூட்டுப் பாலியல், இளம் பெண் அலைக்கழிப்பு – அரசு மருத்துமனைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் அந்த இளம் பெண். பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி மாலை பாப்பநாடு பகுதியை சேர்ந்த நண்பர்களான கவிதாசன்(25), திவாகர் (27), பிரவீன்(20), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சேர்ந்து இளம் பெண்ணை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் நான்கு பேரையும் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை

இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற பிறகே கூட்டுப் பாலியல் குறித்த புகாரின் விசாரணை வேகமெடுத்திருக்கிறது. முன்னதாக போலீஸ் இளம் பெண் புகாரில் அலட்சியம் காட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதே போல் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இப்படி போலீஸும், அரசு மருத்துவமனையும் இளம் பெண்ணை அலைய விட்டு அலைக்கழித்துள்ளனர். இது தொடர்பாக ஒரத்தநாடு நீதிமன்றம், அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீஸாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசியபோது, இளம் பெண் கூட்டுப் பாலியல் செய்யபட்ட பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த காவலர்கள் இளம் பெண் கூறியதை அலட்சியமாக கையாண்டு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. கூட்டு பாலியல் செய்யபட்டதால் இளம் பெண்ணின் உடல் நிலையும் மோசமாக இருந்துள்ளது. முதலில் சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பணியிலிருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர் இளம் பெண் சொன்னதை கேட்டதும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து விட்டு வர சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றவரிடம், அங்கிருந்த போலீஸார் இது எங்க லிமிட்டில் வராது, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என அனுப்பியுள்ளனர்.

பாலியல் தொழில்

தனக்கு நேர்ந்த கொடுமையில் துடித்து கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு இவர்களின் அலைக்கழிப்பும் மேலும் வலியை கூட்டியிருக்கிறது. அதன் பின்னர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அங்கு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் வனிதா நிலமையை உணர்ந்து இளம் பெண் புகார் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் பிறகே இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சில டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், இளம் பெண்ணை நாம் திருப்பி அனுப்பியிருக்க கூடாது. அந்த பெண்ணுக்கு நாம் அடைக்கலம் கொடுத்து அடலீஸ்ட் முதலுதவி சிகிச்சையாவது அளித்திருக்க வேண்டும், அப்போது அவர் சொல்வதை வாக்கு மூலமாக ரெக்கார்ட் செய்திருக்கலாம், நாமே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கலாம் ஆனால் இதை செய்யத் தவறி விட்டதாக தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். இந்நிலையில் தனக்கு நடந்த கொடுமை, அலைக்கழிக்கப்பட்டது குறித்து இளம் பெண் தன் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி அழகேசன், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை அளிக்க தவறிய மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் ஏன் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது என்பது குறித்தும் நீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொது சிவில் சட்டம்.

இந்த விவகாரம் மருத்துவமனை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் பாப்பாநாடு, பட்டுக்கோட்டை காவல் நிலையங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது’ என்றனர். இந்நிலையில், ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிற்கு, பெண் எஸ்.ஐ.,சூர்யா, உடனடியாக சட்ட உதவி வழங்காமல் அவரை அலைகழித்தும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் பணியில் அலட்சியமாக செயல்பட்டதை, தஞ்சாவூர் எஸ்.பி.,ஆஷிஷ் ராவத் உறுதி செய்ததுடன், சூர்யாவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.