ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் – வடகால் பகுதியில் 18,000 பேர் தங்கும் வகையில் மெகா தங்கும் விடுதியை தமிழக அரசு கடந்த வாரம் திறந்துவைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு-விடம் அந்நிறுவன பணியாளர்களுக்கான விடுதிகளின் சாவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]