ஆபீஸ்ல வாட்ஸ்-அப் சாட் செய்தாலும் பிரச்சனையில்ல! தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிப்ஸ்!

WhatsApp Web : உபயோகத்தை பொது இடத்தில், வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் போது, ​​உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது சந்தேகம் தான். உங்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய, Google Chrome இன் செட்டிங்க்ஸ் மூலம் தனிப்பட்ட WhatsApp சாட்டிங்குகளை எவ்வாறு மறைப்பது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இது மிகவும் அவசியமான பாதுகாப்பாகும், இல்லாவிட்டால் உங்கள் தரவுகளும், ரகசியங்களும் வெட்டவெளிச்சமாகிவிடும்.

தற்போது பலரும் தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப்பை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதிலும், அலுவலக வேலைகள் தொடர்பாகவும், தனிப்பட்ட தகவல்கள்களை பகிரவும் சுலபமான வழியாக இருப்பது வாட்ஸ்அப் செயலி. வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, மொபைலைத் தவிர, நமது லேப்டாப், கணினி என பலரும் பார்க்குமாறு வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம். அலுவலக வேலை என்றால், நமது அருகில் பலரும் அமர்ந்திருக்கும்போது, தகவல்களை பரிமாறும்போதும், தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்தாலும், அதை பிறரும் பார்த்துவிடுவார்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, உங்கள் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் இந்த செட்டிங்கை ஆன் செய்வது உங்கள் தரவுகள் கசிவதைத் தடுக்கும். ஏனென்றால், டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது பலர் தங்கள் தனிப்பட்ட உரையாடல்களின் தனியுரிமையைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இதனால், பல சமயங்களில் வாட்ஸ்அப்பை திறக்கவே தயங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைகளை தீர்க்க, கூகுள் க்ரோம்-இன் (Google Chrome) அமைப்புகளின் மூலம் தனிப்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) உரையாடல்களை எவ்வாறு மறைப்பது என்பதை தெரிந்துக் கொண்டு பயன்பெறுங்கள்.

ஸ்மார்ட்போன்களில் யாருக்கும் தெரியாமல் உங்கள் தரவுகளை சேமிக்க பல்வேறு ஆப்ஸ்கள் இருப்பது போல், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்களும் எக்ஸ்டென்ஷன்களை (extension) பதிவிறக்கம் செய்யலாம். கூகுள் குரோமின் அமைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட வாட்ஸ்-அப் உரையாடல்களை மறைக்க, கணினி அல்லது மடிக்கணினியில் ஒரு சிறப்பு எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கி நிறுவ வேண்டியது அவசியம்.

இது, விண்டோஸ் (Windows) மற்றும் iOS சாதனங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. தனிப்பட்ட உரையாடல்களை மறைக்கும் செயல்முறையைத் தொடங்க, “வாட்ஸ்அப் வலைக்கான தனியுரிமை நீட்டிப்பு” (Privacy Extension for WhatsApp Web) என்பதைப் பதிவிறக்கம் செய்யவும்.

அதன்பிறகு செய்ய வேண்டிய படிப்படியான செயல்பாடுகள்
குரோம் எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கிய பிறகு, அதை உலாவி எனப்படும் ப்ரெளசரில் (browser) சேர்க்கவும்.
பிரெளசரின் மேல் வலது பக்கத்தில் தட்டி, “Add to Chrome” என்பதைக் கிளிக் செய்யவும்.
Add to Chrome” என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பிறகுதான், இந்த எக்ஸ்டென்ஷன் உங்களுடைய கூகுள் குரோம் பிரெளசரில் சேர்க்கப்படும்.
இந்த செயல்முறை முடிந்த பிறகு கணினியை ரீஸ்டார்ட் செய்யவும்
தற்போது கூகுள் குரோமில் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) செயலியை தேடி மீண்டும் உள்நுழையவும்.
இப்போது அரட்டை மறைக்கவும், மங்கலாக்கவும் உதவும் “Hide Chat” and “Blur” என்ற ஆப்ஷன் இருக்கும்.  இதில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம்.

கூகுள் குரோம் செட்டிங்ஸ் வசதியை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட  உரையாடல்களை வெற்றிகரமாக மறைத்துவிட்டால், அவற்றை உங்களைத் தவிர வேறு எவராலும் அணுக முடியாது. நீங்கள் கூட தேவைப்படும் போது மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும்.

குறிப்பிட்ட அரட்டையைப் பார்க்க, நீங்கள் பேச விரும்பும் தொடர்புக்கு மேல் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இது உரையாடல் வரலாற்றைக் கொண்ட சாட் பாக்ஸ் (chat box) பெட்டியைக் காண்பிக்கும். இதனை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் வாட்ஸ்அப் பயனருடன் தொடர்ந்து உரையாடலாம்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.