தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாட்டில் கடந்த 12-ம் தேதி 23 வயது இளம் பெண் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கவிதாசன்(25), திவாகர்( 27), பிரவீன் (20), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய இரண்டு பேரை போலீஸ் கைது செய்யவில்லை என புகார் எழுந்தது. மேலும் பாலியல் வன்கொடுமையில் செயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரான கவிதாசன் மீது கொலை வழக்கு, பிரவீன் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்கும் உள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவீனை ஒரு முறை பொதுமக்களே பாப்பாநாடு போலீஸில் பிடித்து கொடுத்த சம்பவமும் அரங்கேறியதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன், பாப்பாநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இது குறித்தும் பாப்பாநாடு போலீஸார் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறி வந்தனர். இந்தநிலையில் தான் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தனக்கு நேர்ந்த பெரும் துயரத்துடன், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது பெண் எஸ்.ஐ சூர்யா, இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதத்தை உணர்ந்து புகாரை பெறாமல், மரியாதை குறைச்சலாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் பாலியல் புகாரை ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று கொடுக்க வேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு உடனடியாக சட்ட உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவில்லை, இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக சூர்யா மீது புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து இளம் பெண் கொடுத்த வாக்குமூலத்தில் சூர்யாவில் செயல் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். கஞ்சா விற்பனை செய்பவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் இது போன்று சூர்யா நடந்து கொண்டதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. இதன் பின்னர் பணியில் அலட்சியமாக இருந்த சூர்யாவை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ்ராவத் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு உடனடியாக சட்ட உதவி வழங்காத சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்பாநாடு பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி, ஜியாவுல்ஹக், எஸ்.ஐ சூர்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அவரின் இந்த அதிரடி நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88