டிவிஎஸ் மோட்டாரின் மிகவும் பிரசித்தி பெற்ற ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் தற்பொழுது பல்வேறு மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு ஜூபிடர் 125 போல அதிக இட வசதியை இருக்கைக்கு அடியில் வழங்குவது டீசர் உறுதியாகி இருக்கின்றது. 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் அதிகப்படியான வசதிகள் மற்றும் முதலில் வெளியிடப்பட்ட மாடலுக்கு பிறகு அதிக மாற்றத்தை இந்த மாடலில் இந்நிறுவனம் ஏற்படுத்த உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள டீசரில் முன்புற அப்ரானில் புதிய எல்இடி லைட்பார் ஆனது ஏற்கனவே டிவிஎஸ் ஐக்யூப் மாடலில் உள்ளதை போன்று பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில் இருக்கைக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்டுகள் அதாவது நாம் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் பார்ப்போம் அதிகப்படியான இடவசதி இருக்கும் அதுபோன்று ஜூபிடர் 110 மாடலும் பெற உள்ளது. அதே நேரத்தில் தற்பொழுது உள்ள மாடலில் இருந்து மாறுபட்ட டிசைன் அமைப்பினையும் கூடுதலான கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் இந்த மாடலானது பெறுவது உறுதியாகியுள்ளது.
109.7cc ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 7.88PS பவர் மற்றும் 8.8Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் பெரிதாக மாற்றம் இருக்காது. தற்பொழுது உள்ள முன்புறத்தில் ட்ரம் அல்லது டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கூடுதலாக பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்சன் பெற்று கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைந்திருக்கும். மற்றபடி, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆனது கொடுக்கப்பட்டிருக்கும்.