பங்கு முதலீட்டில் லாபம் தரும் டெக்னிக்கல் அனாலிசிஸ்; ஏன், எதற்கு, எப்படி? முழுமையான பயிற்சி

பங்குச் சந்தை சமீப காலங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. காரணம், சந்தையில் இப்போதைக்கு அரசு அங்கீகரித்துள்ள முதலீடுகளில் பங்குச் சந்தைதான் அதிக லாபம் கொடுப்பதாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கொரோனாவுக்குப் பிறகு, ஆரம்பத்தில் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் முன்னேறி பல வரலாற்று உச்சங்களை எட்டி முதலீட்டாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியது. எனவே, பல சாதகமான அம்சங்கள் இந்தியாவுக்கும், இந்தியப் பங்கு சந்தைக்கும் இருப்பதால் முதலீட்டாளர்கள் அதன் பலனை அடைவதில் தீவிரமாக இருக்கிறார்கள். 

பங்கு முதலீடு…

ஆனால், பங்குச் சந்தை என்பது அரசு அங்கீகாரம் பெற்ற முதலீடு என்றாலும், இது மிகவும் ரிஸ்க்கானது என்பதையும் மறுக்க முடியாது. எனில், பங்குச் சந்தையில் இருந்து ஒதுங்கியும் இருந்துவிடாமல், கணிசமான வருமானமும் ஈட்டவும் முடியுமா என்றுதான் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் பங்குச் சந்தையின் சில நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு இறங்கினால் நிச்சயம் நம்மால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

எந்த நிறுவனப் பங்கை வாங்கலாம், என்ன விலையில் வாங்கலாம், நாம் வாங்கிய விலையிலிருந்து எவ்வளவு விலை உயரும், நமக்காக இந்த நிறுவனம் வேலை செய்யுமா, நாம் போடுகிற பணம் வளருமா, எப்போது அந்தப் பங்கை விற்க வேண்டும் என்பதெல்லாம்தான் பங்குச் சந்தையில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை. 

பங்கு முதலீடு

பங்குச் சந்தையில் அடிப்படையாக ஃபண்டமென்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மிகவும் முக்கியம். இந்த மூன்றிலும் தெளிவு இருந்தால் யார் வேண்டுமானாலும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்கலாம்.   

பங்கு முதலீடு

எந்தப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும், நாம் எடுக்கக்கூடிய ரிஸ்க் எவ்வளவு, அதன் பலன் என்ன என்பதையெல்லாம்தான் டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் பார்ப்போம். 

இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது எல்லோருக்கும் கைவரக்கூடிய விஷயமல்ல. அதைப் படித்தோ, வீடியோக்களில் பார்த்தோ புரிந்துகொள்ள முடியாது. அதைச் சரியான நிபுணத்துவம் கொண்ட நபர்கள் சொல்லித்தந்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

எனவேதான் பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது நடைமுறை ரீதியிலான பயிற்சி வகுப்பு என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும். மேலும், இன்டர்நெட் வசதிக்காக நெட் கருவி இருந்தால் கொண்டு வரவும் அல்லது இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும்.

ரெஜி தாமஸ்

ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

பங்கு முதலீடு

இந்த நிகழ்ச்சியில் பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம், டெக்னிக்கல் அனாலிசிஸ் – ஷார்ட் – தேவை, வகைகள் மற்றும் விளக்கம், டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும். 

இந்த நிகழ்ச்சிக்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.6,000 மட்டுமே ஆகும். இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U லிங்கை க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.