வாட்ஸ்அப், டெலகிராம் பயனர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் மத்திய அரசின் புதிய விதிகள் அமல்

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளிக்கு வகையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், புதிய தொலைத்தொடர்பு மசோதா மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் புதிய விதிகளை கொண்டுவர துரிதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

WhatsApp மற்றும் Telegram செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 18, 2023 அன்று மக்களவையில் தொலைத்தொடர்பு மசோதா 2023 அறிமுகப்படுத்தியது. இருப்பினும், தற்போது அறிகமுகப்படுத்தப்படும் புதிய மசோதா வாட்ஸ்அப் மற்றும் டெலிகாம் போன்ற OTT தள பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஏனெனில் அவை புதிய தொலைத்தொடர்பு மசோதாவின் கீழ் கட்டுப்படுத்தப்படாது. 

மத்திய அரசு மறுபுறம், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசாங்கம் விரைவில் புதிய விதிகளை வெளியிடலாம்.  இதன் மூலம் இந்திய குடிமக்களின் தரவுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்வது தடுக்கப்படும்.

புதிய விதிகளின் வரைவு ஒரு மாதத்தில் விவாதத்திற்கு வெளியிடப்படும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விவாதத்திற்கு பிறகு விதிகள் அமல்படுத்தப்படும். புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, சமூக ஊடக நிறுவனங்கள் மீதான விதிகள் கடுமையாக்கப்படும்.

சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களின் தரவை உபயோகிப்பதற்கு முன் பயனர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதிமுறையும் புதிய விதிகளில் சேர்க்கபப்ட உள்ளது. பயனர்களின் ஒப்புதல் இல்லாமல், சமூக ஊடக நிறுவனங்களால் பயனர்களின் தரவைப் பகிர முடியாது.

சமூக ஊடகங்கள் என்ற போர்வையில் சிறார்களின் தரவுகள் திருடப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாவதை தடுக்க, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதிய விதி அமல்படுத்தப்படும். புதிய விதிகளின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்கை ஏற்படுத்த பெற்றோரின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்படும். 

புதிய விதிகளின்படி டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வாரியமும் உருவாக்கப்படும். இது தவிர தரவு தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசு பல கட்டங்களாக விதிகளை அமல்படுத்தவும் திட்டம் தீட்டி வருகிறது.

முன்னதாக, 2024 ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவை தற்போது அமல்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஒளிபரப்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட சட்டமாகும். மசோதாவின் முதல் வரைவு 2023ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் தரவு பாதுகாப்பு பெறும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், இதன் மூலம் பயனர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.