நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட சந்தையில் முதல் மாடலை ஸ்கோடா இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேன தயாரிக்கப்பட்டதாக விற்பனைக்கு கொண்டுவர உள்ள நிலையில் இதற்கான பெயரை சூட்டும் விழாவை நாம்கரன் என நாளை அறிவித்து பெயருக்கான தேர்வுகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில் பத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உறுதி செய்யப்பட்டு தற்பொழுது ஐந்து பெயர்களை இறுதி செய்துள்ளது.
பட்ஜெட் விலையிலும் சிறப்பான பாதுகாப்பு கொண்டதாகவும் அடிமைக்கப்பட உள்ள ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வர உள்ள இந்த மாடலானது மிகச் சிறப்பான வசதிகளை கொண்டிருக்கும். தற்பொழுது Kwiq, Kylaq, Kosmiq, Kliq, மற்றும் Kayaq என ஐந்து பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஐந்து பெயர்களில் ஏதேனும் ஒன்றுதான் நாளை உறுதியாக அறிவிக்கப்பட உள்ளது மேலும் இந்த பெயர்களில் வாக்களித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் செக் குடியரசில் உள்ள ஸ்கோடா தலைமை இடத்தினை பார்ப்பதற்கான பயணத்தை முற்றிலும் இந்நிறுவனம் ஏற்படுத்தி தர உள்ளது.
இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரில் ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற இந்நிறுவனத்தின் பிரபலமான 1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிகபட்சமாக 113 bhp பவர் மற்றும் 178 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேறு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆறு வகையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது பெற உள்ளது.
இந்த மாடலுக்கு இந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் சந்தையில் கிடைக்கின்ற டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், மாருதி பிரான்க்ஸ், பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஆகியவற்றை இந்த ஸ்கோடா எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது. வருகின்ற ஜனவரி மாத துவக்க வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.