க்ரெட்டா அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அல்கசார் 2024 ஆறு மற்றும் ஏழு இருக்கை கொண்ட மாடலுக்கான அறிமுக தேதியை ஹூண்டாய் நிறுவனம் செப்டம்பர் 9 ஆக அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட டிசைனில் வர உள்ள இந்த மாடலில் எஞ்சின் தொடர்பில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
புதிய 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக MT மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
2024 கிரெட்டா காரில் இருந்து பெறப்பட்ட எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லைட் அமைப்பினை பெற உள்ள இந்த மாடல் ஆனது வித்தியாசமான கிரில் அமைப்பை கரெக்டா மாடலில் இருந்து மாறுபட்டதாக வெளிப்படுத்த வகையில் அமைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது ஆனால் தற்பொழுது வரை அதனுடைய உறுதித் தன்மை வெளிப்படவில்லை. மேலும் பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் டிசைன் பெறுகின்றது.
மற்றபடி அல்கசார் அதனுடைய டோர் அமைப்புகளிலும் பில்லர் பகுதிகளிலும் பெரிதாக மாற்றமில்லை தற்பொழுது உள்ள மாடலை போலவே அமைந்திருக்கின்றது. பின்புறத்தில் உள்ள பம்பரிலும் புதுப்பிக்கப்பட்ட சில கோடுகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். மற்றபடி, தோற்றத்தில் வழக்கம் போல அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவது உடன் கூடுதலாக எல்இடி லைட்டுகளை பின்புறத்தில் வழங்கி இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இன்டீரியரில் கிரெட்டா காரில் உள்ளதை போன்றே டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் பெற்றிக்கும். மற்றபடி, லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்புடன் அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் கொண்டிருக்கும். பனேரோமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன்பக்க இருக்கை, வயர்லெஸ் சார்ஜர், அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற XUV 700, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் போன்றவை உள்ளன.