தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையுடன் இரவு நேரத்தில் மற்றும் காலை வேளையில் ஏற்படும் குளிரான காலநிலையினால் சிறுவர்களுக்கு ஆஸ்துமா (மூச்சிரைப்பு) நோய் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கவனத்திற்கொண்டு சிறுவர்களை ஆஸ்துமா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட வைத்தியர் நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு நேற்று (20) இது தொடர்பாகக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கிடையே இருமல், சுவாசிப்பதற்கு சிரமப்படுதல், இரவு நேரத்தில் காணப்படும் இருமல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்படுமாயின், இது ஆஸ்துமா (மூச்சிரைப்பு) என அடையாளம் காண முடியும் என்றும், அதிகமாக வைரஸ் நோயின் பின்னர் ஒரு மாதமளவில் இருமல் காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் ஆஸ்துமா (மூச்சிரைப்பு) நோய் உள்ளவர்களுக்கும், இந்நோய் ஏற்பட்டிறாதவர்களுக்கும் இது ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர், குளிர் காலம் மற்றும் மழை காரணமாக மேலும் வைரஸ் காய்ச்சல் பரவக்கூடிய நிலை காணப்படுவதாகவும் வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…
குளிரில் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதைத் தவிர்க்கவும், அவ்வாறு செல்வதாயின்; குளிரிலிருந்து பாதுகாப்பளிக்கக் கூடியதான ஆடைகளை அணிவித்து அதிக குளிரிலுருந்து பிள்ளைகளைப் பாதுகாக்குமாறும்; கேட்டுக்கொண்டார்.
இந்த நாட்களில் கொழும்பு பிரதேசங்களில் காலையில் அதிக குளிர் காணப்படுவதாகக் குறிப்பிட்ட விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, குளிரில் மட்டுமன்றி வைரஸ் காய்ச்சலினாலும் அதிகமானவர்களுக்கு ஆஸ்துமா (மூச்சிரைப்பு) ஏற்படக்கூடும் என்றும் தெளிவுபடுத்தினார்.
வைரஸ் காய்ச்சலுக்குப் பின்னர் மார்பு வலி மற்றும் காய்ச்சல் தொடர்ந்தும் காணப்படுமானால் காச நோய் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், தற்போது காணப்படும் வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் போன்றவைகளும் அது தவிர வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறும், புகை பிடிக்கும் தந்தைமார் மற்றும் பெரியவர்கள் வீடுகளில் இருந்தால் பிள்ளைகளுக்கு ஆஸ்துமா (மூச்சிரைப்பு) நோய் ஏற்படும் அபாயம் அதிகம் சிறு என்றுமட் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.