நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன. கட்டை இழந்து தவிக்கும் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் தேயிலை, காபி தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள பிரதர்காடு சசக்ஸ் என்ற தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று இரண்டு புலிகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டு, புலிகளின் இறப்பை உறுதி செய்துள்ளனர். அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சென்ற அதிகாரிகள், புலிகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வு செய்துள்ளனர். உடல் பாகங்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இறந்த புலிகளின் உடல்களை அதே பகுதியில் எரியூட்டி அழித்துள்ளனர்.
இது குறித்து கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள், “9 வயது மதிக்கத்தக்க பெண் புலி மற்றும் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என இரண்டு புலிகள் தனியார் தேயிலை தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்தன. 200 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றியின் உடல் பாகங்கள் கிடந்தன. விஷம் கலக்கப்பட்ட காட்டுப்பன்றியின் உடலை தின்ற இந்த இரண்டு புலிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு,
துடித்து இறந்திருக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் முழுமையான காரணத்தை கண்டறிய அனைத்து வகையிலும் தொடர்ந்து விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டு வருகிறோம்” என்றனர் .
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88