கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள்… செப்டெம்பர் 1ம் தேதி முதல் புதிய விதிகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கப்படும் வகையில் கூகுள் பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றலாம். புதிய தரக் கட்டுப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிளே ஸ்டோரின் விதிகளில் பெரிய மாற்றம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் பல தீங்கிழைக்கும் செயலிகள் பல மறைந்துள்ள நிலையில், அவற்றை முற்றிலும் நீக்க, இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது. கூகுள் தனது பிளே ஸ்டோரின் விதிகளில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. கூகுளின் இந்த முடிவால், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பினரைச் சென்றடைவது தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கப்பட்ட செயலி மூலம் நடந்த மோசடி சம்பவம்

மோசடிக்கும் காரணமான ஒரு செயலி கூகுள் நிறுவனம் பாதுகாத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது. ப்ளே ஸ்டோரில் இருந்து கிரிப்டோ செயலியை பதிவிறக்கம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட. பாதிக்கப்பட்ட பெண் பதிவிறக்கம் செய்த செயலியின் உதவியுடன், மோசடி செய்பவர்கள் அவரை ஏமாற்றியுள்ளனர்.

தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் எழுப்பிய கேள்வி

கிரிப்டோ செயலி பதிவிறக்கம் மூலம் மோசடி ஏற்பட்ட சமபவத்தைத் தொடர்ந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். மேலும் இந்த செயலி எவ்வளவு காலம் ப்ளே ஸ்டோரில் உள்ளது, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மெட்டா நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

ப்ளே ஸ்டோரில் பல ஆப்ஸ்கள் ஆபத்தானவை என்பது குறித்து முன்பே மெட்டா நிறுவனம் ஒரு அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் உள்ள பாதுக்காப்பு குறைபாடுகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சுவிட்சர்லாந்த் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் EPFL என்னும் ஆராய்ச்சி நிறுவனம் கூகுளின் ஆண்ட்ராய்டு சிஸ்டம் தொடர்பாக 31 முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது கூகுள் தனது அமைப்பில் மாற்றங்களைச் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.