இந்தியா சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் F 900 GS, F 900 GS அட்வென்ச்சர் டூரிங் என இரு மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளதை உறுதி செய்ய முடியும் டீசரை வெளியிட்டு இருக்கின்றது. தற்போது, இந்த இரண்டு மாடல்களுக்கும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
முந்தைய F 850 GS மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஃப் 900 வரிசை மாடலில் இடம்பெற்றுள்ளதற்போதைய 853சிசி என்ஜினில் இருந்து புதுப்பிக்கப்பட்ட 895சிசி புதிய எஞ்சின் அதிகபட்சமாக 105hp மற்றும் 93Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட கூடுதலாக 10hp பவர் மற்றும் 1Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக F 900 GS மற்றும் குறைந்த டூரிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக F 900 GSA விளங்க உள்ளது.
முந்தைய மாடலை விட 27 கிலோ கிராம் எடை குறைவாக அமைந்துள்ள இந்த மாடலில் முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல ஸ்மோக் வீல் கொண்டிருக்கின்றது. சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அட்ஜெஸ்டபிள் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட்பிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கின்றது.
பல்வேறு எலக்ட்ரானிக் சார்ந்த அம்சங்களுடன் டிராக்சன் கண்ட்ரோல் பவர் மோடு, ஏபிஎஸ், பை டைரக்ஷனல் குவிக் ஷீவிஃப்டெர் கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது பிஎம்டபிள்யூ F 900 GS மற்றும் F 900 GSA விலை ரூபாய் 13.50 லட்சத்தில் துவங்கலாம்.