ஏர்டெல் – வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவலைக் கோரும் தொலைத்தொடர்புத் துறை

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மனதில் கொண்டு, நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து பெறப்படும் சீன நிறுவனங்களின் உபகரண நெட்வொர்க்கைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்பாத நிலையில், தனியார் தொலைத்தொடர்பு  நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவல் ஒன்றை கோரியுள்ளது. 

‘நம்பகமற்ற ஆதாரங்கள்’  மூலம் கிடைக்கும்  கருவிகள்

இரு நிறுவனங்களும் தங்கள் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் ‘நம்பகமற்ற ஆதாரங்கள்’  மூலம் கிடைக்கும்  கருவிகளை பயன்படுத்துவது குறித்த தகவல்களை வழங்க வேண்டும் தொலைத்தொடர்புத் துறை கோரியுள்ளது. இதற்காக இந்த இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் DoT பல நோட்டீஸ் அனுப்பியுள்ளது, ஆனால் இதுவரை இந்த இரு நிறுவனங்களும் இந்த தகவலை வழங்கவில்லை.

DoT கோரியுள்ள விவரங்கள்

தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் குறிப்பாக ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனம், நெட்வொர்க் சேவையில் பயன்படுத்தப்படும் ஹூவாய் Huawei மற்றும்  ZTE உபகரணங்களின் விவரங்களைக் DoT கோரியுள்ளது. ஏனெனில் இந்த இரண்டு நிறுவனங்களும் ‘நம்பகமற்ற’  நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் என்ற அந்தஸ்தைக் பெற்றுள்ள பிற நிறுவனங்களுடன் இணைத்துள்ளன. அதாவது நம்பகமான ஆதாரங்களில் இருந்து உபகரணங்கள் வாங்கவில்லை.

Huawei மற்றும் ZTE நெட்வொர்க் சாதனங்கள் 

பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள்  நம்பகமான ஆதாரங்களில் இருந்து மென்பொருளின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், Huawei மற்றும் ZTE போன்ற நம்பத்தகாத மூலங்களிலிருந்து எவ்வளவு நெட்வொர்க் சாதனங்கள் வாங்கப்பட்டன என்பதைக் கண்டறிய, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் DoT நோட்டீஸ்களை வழங்கியது. 

பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை

பாதுகாப்பு அமசத்துடன், DoT இன் இந்த அறிவுறுத்தலின் மற்றொரு நோக்கம், நம்பகமான ஆதாரங்களில் இருந்து வாங்கப்பட்டால் எவ்வளவு செலவாகும் என்பதை அறிவதும், அந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகளை எடுப்பதும் ஆகும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி அளித்துள்ளது. இந்தியாவிலும் இதைச் செய்ய விரும்பும் தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

அமெரிக்காவை பின்பற்றும் இந்தியா

தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து அமெரிக்க அரசு செயல்படுத்திய ‘ரிப் அண்ட் ரிப்ளேஸ்’ திட்டத்தை போலவே, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான தொலைத்தொடர்பு பயனர்களின் தனிப்பட்ட தரவு எந்த நம்பத்தகாத ஆதாரங்களையும், குறிப்பாக சீன நிறுவனங்களைச் சென்றடையாமல் பாதுக்காக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6ஜி சோதனை திட்டம் 

இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறை வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். நாடு  தற்போது 6ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் உருவாக்கி வருவதாக கூறினார். அரசு தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.