‘செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் படிமுறையாக தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம் தரம் 9ஆம் தரம் வரைக்கும் கல்விபயிலும் மாணவர்களின் பங்களிப்புடன் மே;றகொள்ளப்படவுள்ளது.
எதிர்கால உலகலாவிய போக்குகளை உருவாக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதும், பொருளாதார அபிவிருத்தியில் பயனுள்ள வகையில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதும் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இயலுமாகும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் வழங்குவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று (21.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
1. செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ கல்வி முறைமையை அறிமுகப்படுத்தல்
எதிர்கால உலகலாவிய போக்குகளை உருவாக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதும், பொருளாதார அபிவிருத்தியில் பயனுள்ள வகையில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதும் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இயலுமாகும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் வழங்குவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் ஆரம்பப் படிமுறையாக தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம் தரம் 9ஆம் தரம் வரைக்கும் கல்விபயிலும் மாணவர்களின் பங்களிப்புடன் ‘செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.