இலங்கை கவச வாகனப் படையணியின் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பீ குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 54 வது இராணுவ செயலாளராக 20 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
மகா சங்க உறுப்பினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய இராணுவ செயலாளர் புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
இராணுவ செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பீ குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையகத்தில் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.