Virat Kohli, Kedar Jadhav : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பிளேயராக இருக்கும் விராட் கோலி கேப்டன்சியில், விளையாடிய ஒரு பிளேயர் இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிக்களில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் விராட் கோலியால் பெரிதும் பாரட்டப்பட்டு, மேட்ச் வின்னர் என்ற அங்கீகாரம் எல்லாம் கிடைத்தும், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, கேதார் ஜாதவ் தான். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடினார்.
கேதார் ஜாதவ் அறிமுகம்
தற்போது 39 வயதாகும் கேதார் ஜாதவ் 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கிய அவர் கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
கேதார் ஜாதவின் சிறப்பான பேட்டிங்
அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ் என்றால் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆடிய ஆட்டம் தான். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 350 ரன்கள் குவித்தது. ஆனால் சேஸிங் ஆடிய இந்திய அணி 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அப்போதைய கேப்டன் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேதார் ஜாதவ். அந்த போட்டியில் விராட் கோலி 105 பந்துகளில் 122 ரன்களும், கேதார் ஜாதவ் 76 பந்துகளில் 4 சிக்சர்கள் 12 பவுண்டரிகளுடன் 120 ரன்களும் குவித்தனர். பின்வரிசையில் இறங்கிய பாண்டியா 40 ரன்கள்எடுக்க இதிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் இருந்து நீக்கம்
இந்தப்போட்டிக்குப் பிறகு கேதார் ஜாதவுக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் அதனை தொடர்ச்சியாக வீண்டித்தார். கேதர் ஜாதவ் மொத்தம் 9 டி20 சர்வதேச போட்டிகளிலும், 73 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஜாதவ் டி20 பார்மேட்டில் 20 சராசரியில் 122 ரன்களையும், 73 ஒருநாள் போட்டிகளில் 1389 ரன்களையும் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அத்தோடு கேதார் ஜாதவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.